கோவை : கோவை ரயில் நிலையம் அருகே சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவையின் முக்கிய சாலையான ரயில் நிலையம் சாலையில். காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டேட் பேங்கின் தலைமை அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்கின்றனர். இந்த பரபரப்பான சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்து ரயில் நிலையம் வரை சாக்கடை அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுமார் 50 ஆண்டுகள் பழமையான மலைவாத நாராயண மரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருந்துள்ளது. சாக்கடை பணிக்காக மரத்தின் வேர் பகுதியில் இருந்த மண் அகற்றப்பட்டதால், வலுவிழந்து இன்று மாலை வேரோடு சாய்ந்தது. இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு அம்மரத்தை வெட்டி அகற்றினர்.

இந்த மரம் விழுந்ததால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்தப் பகுதியில் மரம் விழும்போது, பொதுமக்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது. பாதிப்புக்குள்ளான இந்த மரம் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் விழ வாய்ப்புள்ளது என பலமுறை சமூக ஆர்வலர்கள் எச்சரித்தும், மரத்தை அகற்ற அதிகாரிகள் முன்வரவில்லை. இந்த நிலையில் இந்த பழமையான மரம் சாலையில் சரிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.