ஆலந்துரை அருகே கன்றுக்குட்டியை வேட்டையாடிய சிறுத்தை : பொதுமக்கள் பீதி

கோவை : கோவை மாவட்டம் ஆலந்துரை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோவை : கோவை மாவட்டம் ஆலந்துரை அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆலந்துரையை அடுத்து பெருமாள்கோவில்பதி கிராமம் உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. 

இந்த நிலையில், நேற்று மாலை நேரம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, கால்நடைகளின் கூட்டத்திற்குள் புகுந்து தாக்கியது. இதில், கன்றுக் குட்டி ஒன்று உயிரிழந்தது. மற்றொரு கன்று பலத்த காயமடைந்தது. பின்னர், இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை விரட்டியடித்தனர். 



இதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த கன்றுவை, அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

கடந்த டிசம்பர் 5-ம் தேதி மங்கலப்பாளையம் அருகே கூண்டு வைத்து சிறுத்தை ஒன்று பிடிக்கப்பட்டு, தெங்குமரஹடா பகுதி வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...