தமிழகத்தில் பெண் வன்கொடுமை சம்பவங்கள் குறைவு : தமிழக மகளிர் ஆணைய தலைவர் தகவல்

நீலகிரி: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பெண் வன்கொடுமை குறைவாக இருப்பதாக தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.


நீலகிரி: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் பெண் வன்கொடுமை குறைவாக இருப்பதாக தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார். 

உதகையில், சமூக நலத்துறை சார்பாக பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். தமிழக மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்கியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 1,000 பெண்களுக்கு 4 கோடியே 21 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. 



இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பெண்கள் வன்கொடுமை மிகவும் குறைவாகவே உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து பெண்கள் மீதான வன்கொடுமை புகார்கள் மிகவும் குறைவாக உள்ளது. பெற்றோர்களின் சொத்துக்களை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்கள் பிள்ளைகள் பெற்றோர்களை கவனிக்காமல் விட்டு விடுவதை தடுக்கும் விதமாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பெற்றோர்களின் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," எனக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...