திருப்பூர் : உடுமலை அருகே கணியூரில் ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரி மாணவிகள் சார்பில், மரம் வளர்ப்பு மற்றும் மழையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கணியூரில் ஜி.வி.ஜி. மகளிர் கல்லூரி சார்பில் மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மழையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கல்லூரி மாணவிகள் கணியூா் பேரூராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக பதாகைகளுடன் பேரணி சென்றனர்.

மரம் வெட்டப்படுவதால் மழை இல்லாமல் விவசாயமும், குடிநீர் தட்டுப்பாட்டால் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருவது பற்றியும், மக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கவும் மாணவர்கள் வலியுறுத்தினர். மேலும், மாணவிகள் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர்.

இந்தப் பேரணியை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.