குடும்பப் பிரச்சனை காரணமாக காணாமல் போன விவசாயி 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

திருப்பூர் : திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி, மூன்று நாட்களுக்குப் பின்னர் உடல் மீட்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் குடும்ப பிரச்சினை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி, மூன்று நாட்களுக்குப் பின்னர் உடல் மீட்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக பல்லடம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பல்லடம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 



விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி கொல்லி மாத்திரையை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. கடந்த 3 நாட்களாக ராமசாமியைக் காணாத நிலையில், இன்று பூச்சி கொல்லி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...