கோவை : செல்வபுரம் அருகே சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கோவை மாநகர பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த சில நாட்களாகவே திடீர் திடீரென உடல் பாதிப்புகளுக்குள்ளாகி வந்தார். மேலும், தீராத வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தனர். அப்போது, அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
அந்த சிறுமியின் சகோதரர் வகையிலான உறவினர் அஸ்வின் (18) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீஸார், அஸ்வின் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் (போக்ஸோ) 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இறுதியாண்டு படித்து வந்த அவர், போலீஸார் தேடுவதை அறிந்து தலைமறைவானார்.
இந்த நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அஸ்வினை செல்வபுரம் போலீஸார் கைது செய்து, ஜே.எம்.5-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.