டெக்ஸ்டைல் ஆலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை வெளியிட்டது சைமா

கோவை : டெக்ஸ்டைல் ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை தவிர்க்கும் வகையில், பல்வேறு புதிய விதிமுறைகளை தென்னிந்திய நூற்பாலை சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

கோவை : டெக்ஸ்டைல் ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகளை தவிர்க்கும் வகையில், பல்வேறு புதிய விதிமுறைகளை தென்னிந்திய நூற்பாலை சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சைமா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மகளிர் நல ஆணையத்தின் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- 



தமிழகத்தில் உள்ள டெக்ஸ்டைல் மில்களில் 75 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனால், மகளிர் நல ஆணையத்தின் மூலம் பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் பாதுகாப்பிற்காக நல ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2010-ம் ஆண்டு வகுக்கப்பட்ட டெக்ஸ்டைல் ஆலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சைமா பல்வேறு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. 

குறிப்பாக, பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான தமிழக விடுதிகள் சட்டம் உள்ளிட்ட புதிய சட்டங்களில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வை தமிழகத்தில் உள்ள அனைத்து டெக்ஸ்டைல் ஆலைகளில் சைமா மற்றும் மகளிர்நல ஆணையம் இணைந்து ஏற்படுத்த உள்ளது. 

10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனத்தில் புகார் குழு அமைக்க வேண்டும் என்பது சட்டமாகும். நிறுவனத்தில் பெண் தொழிலாளர்களுக்கு பணியாளர்கள் அளிக்கும் புகாரைப் பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணிபுரியும் இடத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பதிவு செய்ய பெண்களுக்கு கற்பித்து வருகிறோம். பெண் தொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் விதமாகவும், உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் கவுன்சிலிங் வழங்க திட்டமிட்டுள்ளோம், இவ்வாறு அவர் கூறினார். 



இதைத் தொடர்ந்து, சைமாவின் தலைவர் பி. நடராஜ் கூறுகையில், "பிரிட்டிஷ் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஷ்டிடியூட் (BSI) உடன் சைமா ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. அதன்படி, பணிபுரியும் இடத்தின் நிலை, சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. மேலும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் தினக் கூலியின் அளவு அதிகமாகத்தான் உள்ளது," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...