திருப்பூர் : உடுமலையில் உயா்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது-

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விவசாய நிலத்தில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், 13-வது நாளாகக் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாயிகளின் சங்கங்கள் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மடத்துக்குளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது, விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதை தவிர்த்து கேபிள் மூலமாக கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.