சென்னை : தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 253.23 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு, ரூ.36,293 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்து நேற்று சென்னை பனகல் கட்டட கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் (தாய்) திட்டம்-II, ஊரக குடியிருப்புத் திட்டங்களான முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுதல், ஊரக சாலைப் பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்தும், விதி-110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், மானியக் கோரிக்கை அறிவிப்புகள் உள்ளிட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இவ்வாய்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது :- விவசாயப் பணிகள் பாதிப்பின் காரணமாக கிராம மக்களுக்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்திடும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 25 கோடி மனித சக்தி நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் நிலத்தடி நீரினை செறிவூட்டும் பணிகளை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும்.
தமிழகத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் 31 மாவட்டங்களில், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 79,394 குக்கிராமங்கள் உள்ளன. மொத்தமுள்ள 79,394 குக்கிராமங்களில், நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டருக்கு குறைவாக 4,070 குக்கிராமங்களிலும், 40–55 லிட்டருக்கு குறையாமல் 12,845 குக்கிராமங்களிலும், 55 லிட்டருக்கு மேல், 62,479 குக்கிராமங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, இவ்வாறு கூறினார்.