ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்கக் கோரி கோவையில் பேரணி

கோவை : 10 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழரை விடுவிக்கக் கோரி கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.

கோவை : 10 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழரை விடுவிக்கக் கோரி கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் மற்றும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகள் ஆகியோரை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோவையில் பேரணி நடைபெற்றது. கோவை அவினாசி சாலை, அண்ணா சிலை அருகே துவங்கிய பேரணி தெற்கு தாசில்தார் அலுவலகம் வரை வந்தது. அதன் பின்னர் ஆர்பாட்டம் நடைபெற்றது. 



இதையடுத்து, ஆர்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் போது இசுலாமிய கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அளித்த உறுதியை நிறைவேற்ற வேண்டும் என பேரணி மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...