நீலகிரி : படுக இன மக்களின் பாரம்பரிய ஹெத்தை அம்மன் திருவிழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டவர்கள் பக்தி பரவசத்துடன் இன்று பூ குண்டம் இறங்கினர்.

படுக இன மக்களின் குல தெய்வமாக ஹெத்தையம்மன் உள்ளது. படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா டிசம்பர் 24-ந் தேதி தொடங்கியது.
இந்த பண்டிகையில், ஜெகதளா மற்றும் பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இங்கு மட்டுமே கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது. மேலும், ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பண்டிகையில், ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொள்வது வழக்கம்.
இதையடுத்து, விரதம் மேற்கொண்டவர்கள் ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாகத் தாய்வீடான கொதுமுடி கோவிலுக்குப் பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர். அதன்பின் சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். இதனைத் தொடர்ந்து, 8 கிராமங்களில் இருந்தும் ஹெத்தைக்காரர்கள் ஹெத்தைதடியுடன் காரக்கொரை மடிமனைக்கு வந்தனர்.
மேலும், இன்று காரக்கொரை மடிமனையில் நடந்த பூகுண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த திருவிழாவில் சிறப்பு பூஜை நடத்தியதைத் தொடர்ந்து கோவில் பூசாரி குண்டம் இறங்கினார். அதன் பின்னர் கும்பம் எடுத்து வந்த பூசாரி உட்பட ஹெத்தைக்காரர்கள் 11 பேர் பூ குண்டம் இறங்கினர். இதையடுத்து, பூகுண்டம் இறங்கியவர்களின் காலில் விழுந்து படுக இன மக்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆடல், பாடல் வழிபாடுகளை நடத்தினர். இந்த திருவிழாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.