பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தைச் சார்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணிபுரியு ஒப்புதல் வழங்க வேண்டும். மேலும், தொழிலாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டை வழங்கிட வேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.380 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பிராதான கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து கோவை மண்டல செயலாளர் நாகராஜ் கூறுகையில், "புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீர் செய்வது என அனைத்து மின் பணிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறார்கள். ஆனால், எங்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய எந்த அதிகாரியும் முன்வருவது இல்லை.

கஜா புயல் பாதித்த சமயத்தில் நாங்கள் பணியில் இருக்கும் போது, எங்களை இந்தப் பணி முடிந்ததும் நிரந்தரம் செய்வோம் என சொன்ன மின் துறை அமைச்சர் தற்போது அதை செய்ய மறுக்கிறார். இதனைக் கண்டித்து டிசம்பர் 25 -ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...