திருப்பூர் : விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைப்பதைக் கண்டித்து 6 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விவசாயி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளைநிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கண்டித்தும் அவற்றை நெடுஞ்சாலைத் துறைகளின் சாலைகள் வழியே கேபிள் லைன் மூலம் புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் விவசாயிகள் 12 -வது நாளாகக் காத்திருப்புப் போராட்டத்திலும், 6 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கள்ளிப்பாளையம் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில், மின்கோபுர அரக்கன் போல வேடமிட்ட நபரை, பெண்கள் இணைந்து அடித்து தோட்டத்தில் இருந்து விரட்டுவது மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சுமார் 1 கி.மீ தூரம் வரை தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து போராட்டத்திற்கு ஆதரவளித்து பேசினார்.

அவர் பேசுகையில், "தமிழக அரசு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொள்ளாது இத்திட்டத்தினை ஒப்பந்தம் செய்துள்ளது. பெருநிறுவனங்களின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இத்திட்டத்தினை செயல்படுத்த அவசரம் காட்டுகிறது. தற்போது மேற்கு மண்டலத்தில் மட்டுமே நடைபெற்று வரும் போராட்டத்தினை, அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனில் தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம்," என்றார்.

மேலும், 6 -வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளில், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் .