கோவை : உயர்மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளைச் சந்திக்க வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை காவல் துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் விவசாயிகள் 12 -வது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே பந்தலில் 6 -வது நாளாக உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க அரசியல் கட்சியினருக்கு இன்று காலை முதல் காவல்துறை அனுமதி மறுத்து, ஆதரவு தெரிவிக்க வரும் அரசியல் கட்சியினர் திருப்பி அனுப்ப முயன்று வருகின்றனர்.

இதையடுத்து, பொள்ளாச்சி - பல்லடம் சாலையில், சுல்த்தான் பேட்டை அருகே வரும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் போலீசாரால் தடுக்கப்பட்டனர். அப்போது காவல் துறையினரை கண்டித்து மறியலில் ஈடுபட்ட சி.பி.எம் கட்சியினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே, சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுல்த்தான் பேட்டை போராட்ட மையத்திற்கு செல்ல வருகையில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். சிறிது நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையினால் உடன்பாடு எதுவும் ஏற்படாததால், போலீசாரை கண்டித்து முழக்கம் எழுப்பிய சி.பி.எம் கட்சியினர் போலீசார் தடையை மீறி ஊர்வலமாகப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு கே.பாலகிருஷ்ணன் தலைமையில் வகித்தார்.

இந்த ஊர்வலத்திற்கு பின் தடைகளை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும், உண்ணாவிரதம் நடத்தி வரும் விவசாயிகளிடமும் நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து சுல்த்தான் பேட்டை போராட்ட பந்தலில் சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் பேசுகையில், "'தடையை மீறி விவசாயிகளைச் சந்திக்க வந்திருக்கின்றோம். எங்கள் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயாராக இருக்கின்றோம். விவசாயிகளைச் சந்திக்க தடை விதிக்கும் அரசின் அடக்குமுறையையும், வன்முறையும் கண்டிக்கிறோம். போராடும் விவசாயிகளைப் பார்க்கவே கூடாது, ஆதரவு தெரிவிக்க கூடாது என சொன்னால் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும்.
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடம்பிடிக்காமல் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளைச் சந்திக்க விடாமல் தடுக்கும் முரட்டுத்தனமான, ஆராஜகமான நடவடிக்கையைத் தமிழக அரசு கைவிட வேண்டும். மேலும், மின்சாரத்தை கேபிள் மூலம் எடுத்துச் செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றார்.