திருப்பூர் : விவசாய நிலம் வழியே மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், புதை வடமாக மின் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பகுதியில் விவசாயிகள் 12 -வது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 விவசாயிகள் 6 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்தும் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தில், விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த விவசாயிகள், இதுவரை மாவட்ட நிர்வாகம் அவர்களின் பிரச்சினையை கவனத்தில் கொள்ளவில்லை என குற்றம் சாட்டினர். இதையடுத்து, விவசாயிகள் அனைவரும் இணைந்து குறைதீர்ப்பு கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர். மேலும், ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.