கோவை : தமிழக அரசு பிளாஸ்டிக் தடை அறிவித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் பார்களில் மாற்றுப்பொருட்கள் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அரசு வரும் ஜனவரி மாதம் முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இதனைப் பலரும் வரவேற்றாலும் சிலருக்கு இதனால் பாதிப்புகள் அதிகம். மாற்றுப் பொருட்களின் அதிகப்படியான விலை மற்றும் மாற்றுப் பொருட்கள் தட்டுப்பாடு ஆகிய காரணங்களுக்காக அதனைத் தவித்து வருகின்றனர்.
இதனிடையே, இந்த தடையால் டாஸ்மாக் பார்களில் தண்ணீர் பாக்கெட்டுகளும், பிளாஸ்டிக் டம்பளர்களும் இனி உபயோகப்படுத்த முடியாது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன மாற்று வழங்குவது என குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து கோவை மாவட்ட பார் உரிமையாளர்கள் சங்கம் துணைத்தலைவர் லூயிஸ் கூறுகையில், "இந்த தடை வரவேற்கத்தக்கது தான். ஆனாலும், இதனால் எங்கள் தொழிலில் மேலும் பல பிரச்சினைகள் வரும் வாய்ப்புள்ளது. இதனால் தண்ணீர் பாக்கெட்களுக்கு பதிலாக 300 மி.லி தண்ணீர் பாட்டில்கள், மற்றும் பிளாஸ்டிக் அல்லது பேப்பர் கப்புகளுக்குப் பதில் கண்ணாடி டம்பளர்கள் தரலாம் என யோசித்துள்ளோம்.
எனினும், கண்ணாடி டம்பளர்கள் வழங்கப்பட்டால் அது உடைந்து விடும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் சிலர் எடுத்தும் செல்லக் கூடும். எனவே, இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை, " என்றார்.