கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புதானம் : 4 பேருக்கு மறுவாழ்வு

கோவை : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணம்பட்டியைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர் பொன்னம்பலம், மூளைச்சாவடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் நால்வருக்குத் தானமாக அளிக்கப்பட்டது.

கோவை : உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணம்பட்டியைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவன ஊழியர் பொன்னம்பலம், மூளைச்சாவடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் நால்வருக்குத் தானமாக அளிக்கப்பட்டது. 

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் என்.பொன்னம்பலம் (40). இவருக்குச் சொந்த ஊர் ஈரோடு. கோவையில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலை, கடுமையான தலைவலி மற்றும் வயிற்று வலி காரணமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து, பல்நோக்கு மருத்துவமனையின் தலைமை நரம்பியல் நிபுணரான மருத்துவர்.கே.அசோகன் தலைமையிலான மருத்துவர் குழுவினர் அவருக்குத் தீவிரசிகிச்சை அளித்தனர். ஆனாலும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தென்படவில்லை. இந்நிலையில், புதன்கிழமை 6 மணி நேர இடைவெளியில், இருமுறை முழுமையாகப் பொன்னம்பலம் பரிசோதிக்கப்பட்டார். அதில், அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. 

இந்தத் தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் சோகமான தருணத்திலும், பொன்னம்பலத்தின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனர். எனவே, தற்போது 4 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொன்னம்பலத்தின் ஒரு கிட்னி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு கிட்னி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. 

மேலும், அவரது இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு வாழ்வளித்ததுள்ளது. கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. உடல் உறுப்புதானத்தின் அவசியத்தை உணர்ந்து செயல்பட்ட பொன்னம்பலத்தின் குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகம் பெரிதும் பாராட்டியது. 

இதற்கிடையில், உலகிலேயே 8 மணிநேரத்திற்குள் அதிகளவிலான உடல் உறுப்புக் கொடையாளிகளைப் பதிவு செய்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...