உதகை கர்நாடகா பூங்காவில் கோடை சீசனுக்கான பணிகள் தீவிரம்

நீலகிரி : உதகையில் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா கோடை சீசனுக்கு தயாராகி வருகிறது.


நீலகிரி : உதகையில் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா கோடை சீசனுக்கு தயாராகி வருகிறது. 

நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க, இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க என ஆண்டொன்றுக்கு சராசரியாக 30 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உதகை அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதில் தாவரவியல் பூங்கா, தொட்டப்பெட்டா, பைக்காரா, , உதகை படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம், உதகை மலை ரயில் குன்னுார் சிம்ஸ் பூங்கா, கோடநாடு காட்சிமுனை உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா ஸ்தலங்களைப் பராமரிப்பதும் அடங்கும்.



இந்த ஸ்தலங்களைக் காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடகா மாநில தோட்டக்கலைத்துறை சார்பில், கடந்த ஜனவரி மாதம் 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்கா திறக்கப்பட்டது. 

இந்த பூங்கா புல் வெளிகள், மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகை, என பல்வேறு அம்சங்களை உடையது. தற்போது எதிர் வரும் கோடை சீசனுக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 



மேலும், பார்வையாளர்களை வசீகரிக்கும் வண்ணமாக உயர்ரக மலர் நாற்றுகள், பல வண்ணங்களில் மலர்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...