கோவை : ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவரின் மகன் ரத்தினசாமி. இவர் பட்டணம் பகுதியிலுள்ள தாட்கோ லேத் ஒர்க்ஷாப்பில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். மேலும், ரத்தினசாமிக்கு அடிக்கடி நண்பர்களுடன் மது அருந்துவது வழக்கமாக இருந்துள்ளது.
இதற்கிடையே, நேற்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் ரத்தினசாமி சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பீளமேடு காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் முதல்கட்ட விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் அங்கு வந்த சிங்காநல்லூர் காவல்நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சடலமாகக் கிடந்த ரத்தினசாமியின் அருகே கிடந்த உருட்டு கட்டையை கைப்பற்றிய காவல்துறையினர், குடி போதையில் மர்ம நபர்களால் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும், காவல்துறையினர் இந்தக் கொலை சம்பந்தமாக குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.