கோவையில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து ரூ.15 ஆயிரம் கொள்ளை : இரண்டு வாலிபர்கள் கைது

கோவை: ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துத் தர உதவுவதாகக் கூறி ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை: ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுத்துத் தர உதவுவதாகக் கூறி ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கண்ணம்பாளையத்தை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம். சமீபத்தில் இவர் சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் பணம் எடுக்க உதவுவதாகக் கூறியுள்ளார். இதை நம்பிய முருகானந்தம் தனது ஏ.டி.எம் கார்டை அந்த வாலிபரிடம் கொடுத்துள்ளார். பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு அந்த வாலிபர் சென்றுவிட்டார்.

இந்தச் சூழலில், தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக முருகானந்தத்திற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது முருகானந்தத்தின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கபில் (25), கோவையை சேர்ந்த ஜான் ஜோசப் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும், ரூ.4 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், "சம்பவத்தன்று முருகானந்தத்தின் ஏ.டி.எம் கார்டை வாங்கி பணம் எடுத்துக் கொடுத்து உதவுவது போல் நடித்த வாலிபர்கள், அவரது பின் நம்பரை தெரிந்து கொண்டனர். பணம் எடுத்துக் கொடுத்த பின்னர், முருகானந்தத்தின் ஏ.டி.எம் அட்டையைக் கொடுக்காமல் போலியான வேறொரு அட்டையைக் கொடுத்துள்ளனர்.

 

மேலும், முருகானந்தத்தின் ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.15 ஆயிரத்தைக் கொள்ளையடித்து சுற்றித் திரிந்த போது கைது செய்யப்பட்டனர். பொதுமக்கள் ஏ.டி.எம் பின் நம்பர்களை யாரிடமும் பகிரக் கூடாது. ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்த தெரியாதவர்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் ஏ.டி.எம் மையத்திற்கு செல்வது நல்லது." என்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...