வெள்ளத்தில் சேதமடைந்த உயர்மட்ட பாலத்தை விரைந்து சீரமைக்க மலைக்கிராம மக்கள் கோரிக்கை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே நீருக்கடியில் பல மாதங்களாக மூழ்கி, சேதமடைந்த உயர்மட்ட பாலத்தை சீரமைத்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே நீருக்கடியில் பல மாதங்களாக மூழ்கி, சேதமடைந்த உயர்மட்ட பாலத்தை சீரமைத்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஜூலை மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக பவானியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை முழுவதுமாக நிரம்பி அதன் உபரி நீரும் ஆற்றில் வெளியேற்றப்பட்டதால் இப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. 

கரைபுரண்டு ஓடிய பவானியாற்று வெள்ளத்தால் கரை சார்ந்த பகுதியில் இருந்த 100 -க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியதோடு லிங்காபுரம், காந்தவயல், உளியூர், காந்தையூர் உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் மூழ்கி பெரும் சேதமடைந்தன. 



இதற்கிடையே, லிங்காபுரம் மற்றும் காந்தவயல் இடையே, காந்தயாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 20 அடி உயர பாலம் தண்ணீருக்கடியில் மூழ்கியது. இதையடுத்து, இப்பகுதியில் உள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அந்த வழியைப் பயன்படுத்தும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பரிசல்கள் மூலமே ஆற்றை கடந்து நகரப்பகுதிக்கு வர வேண்டிய சூழல் உருவானது. குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் ஆபத்தான வகையில் பரிசல்களில் பயணித்தனர். கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இந்நிலை நீடித்த நிலையில், தற்போது மழை குறைந்து பனி பெய்யும் காரணத்தினால் நீர்வரத்து குறைந்துவிட்டது. எனவே, மூழ்கி கிடந்த பாலம் வெளிவரத் தொடங்கியுள்ளது. 

ஆனால், காட்டாற்றின் நடுவே மாதக்கணக்கில் மூழ்கி கிடந்ததால் பாலத்தின் சில பகுதிகள் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக பாலத்தின் இருபுறமும் இணையும் சாலைப்பகுதியில் நீர் அரிப்பால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பாலத்தின் மேல் பேருந்து உள்ளிட்ட கனரக வாகன போக்குவரத்து தடை நீடிக்கின்றது. இதற்கிடையில், இதுவரை உரிய பாதுகாப்பின்றி பரிசல்களில் பயணித்த மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தற்போது பாலத்தை நடந்து கடந்து வருகின்றனர். 

மேலும், பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், உடனடியாக அப்பாலத்தை சீரமைத்து கொடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் பாலம் மூழ்காத வகையில் அதனை 36 அடியாக உயர்த்தி கட்டவும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...