கோவை : திருவாரூரில் கஜா புயல்சேத சீரமைப்புப் பணியின் போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், எக்கல் கிராமத்தில், கஜா” புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் கோவை மாவட்டம், திருமலைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜோக்கப் என்பவரின் மகன் தாவீது ராஜன் என்கிற டேவிட் என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.