சென்னை : பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையின்படி, பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ கூடாது. தமிழக அரசு பிறப்பித்த இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்திய நாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பிஸ்கட், சிப்ஸ் போன்ற பொருட்களை ஏற்கனவே பொதிந்து கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு விலக்களித்துள்ளது. இது சட்டவிரோதமானது. பன்னாட்டு நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களை பாதுகாக்கும் வகையில், அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இந்த அரசாணை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது’ என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், ‘ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த தடை உத்தரவு பிறப்பித்த அரசாணையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன. தேசிய பசுமை தீர்ப்பாயம் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, எதிர்கால சந்ததியினரையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பிளாஸ்டிக் பைகளை மொத்தமாக தடை செய்ய வேண்டும்’ என்பது தான் எங்களது தனிப்பட்ட கருத்து. அதேநேரம், தமிழக அரசு பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை பொதியப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளித்து இருப்பது ஏற்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.