சிங்காநல்லூர் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நபருக்கு போலீசார் வலைவீச்சு

கோவை : சிங்காநல்லூர் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லாத ஆத்திரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : சிங்காநல்லூர் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லாத ஆத்திரத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிங்காநல்லூரில் உள்ள வசந்தா மில் அருகே சிட்டி யூனியன் பேங்க் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே ஏ.டி.எம். மையமும் உள்ளது. அதில் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை இன்று காலை பணியாளர்கள் சென்று திறந்து பார்க்கும் போது உடைந்த நிலையில் கீழே தள்ளப்பட்டு கிடந்தது. இதைக்கண்ட பணியாளர்கள் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதவி ஆணையாளர் சுரேஷ், ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை செய்தனர்.



விசாரணையில், நேற்று நள்ளிரவு குடிபோதையில் வந்த வாலிபர் ஏ.டி.எம்மை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், பணம் வராததால் ஆத்திரமடைந்த அவர், வெளியில் சென்று கல் எடுத்து வந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கீழே தள்ளியுள்ளார். பின்னர், ஷட்டரை இழுத்து மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதேபோல, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே உள்ள ஏடிஎம் இயந்திரமும் உடைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சம்பவத்தையும் ஒரே நபர் தான் செய்திருப்பார் என்ற கோணத்தில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...