தனியார் டாக்சி மற்றும் மினி பஸ் ஓட்டுனர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சேவை வழங்கிட வேண்டும் : நீலகிரி புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சுற்றுலா வாகனங்களை இயக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற நீலகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சுற்றுலா வாகனங்களை இயக்க வேண்டும் என புதியதாக பொறுப்பேற்ற நீலகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீலகிரி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட போக்குவரத்து அலுவலராக கதிரவன் பொறுப்பேற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, இன்று மாவட்டம் முழுவதும் உள்ள மாக்ஸிகேப், சுற்றுலா வாகன ஓட்டிகள், மினி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரும் 2019 ஆண்டு முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முழுவதும் கணினிமையம் ஆக்கப்பட்டுள்ளதை அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 



அதன்படி, வரும் 2019-ம் ஆண்டு முதல் வாகனங்களுக்கான வரிகள், புதுப்பித்தல் கட்டணங்கள், லைசென்ஸ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் செயல்பட போவதாகவும், இதனால், பொதுமக்கள் காலதாமதத்தை தவிர்த்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாவட்ட போக்குவரத்து அலுவலர் கதிரவன் தெரிவிக்கையில், "நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் என்பதால் அனைத்து வாகன ஓட்டிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும். மினி பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டுடன் வாகனங்களை இயக்க வேண்டும், என்றார்.



இந்தக் கூட்டத்தில் மாக்ஸிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மினிபஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...