அடிப்படை மானியம் ரூ. 1,753.87 கோடியை விடுவிக்க மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு சார்பில் மனு

டெல்லி : வரும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியமான ரூ. 1,753.87 கோடியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமரிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது.


டெல்லி : வரும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியமான ரூ. 1,753.87 கோடியை விடுவிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமரிடம் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் தமிழக அரசின் பல்வேறு கோரிக்கை மனுக்களை மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து அளித்து வருகிறார். 

இந்த நிலையில், மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமரை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, 14-வது மத்திய நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, மத்திய அரசு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 2017-18-ம் ஆண்டிற்கான செயலாக்க மானியம் ரூ.194.78 கோடி மற்றும் 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியம் ரூ.1,753.87 கோடியை விடுவித்தல் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

இதைத்தொடர்ந்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை நேரில் சந்தித்து, கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வலியுறுத்தினார். 



இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்தியலிங்கம், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வேணுகோபால், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...