நீலகிரி : குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது அதிகளவில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' என்ற அணில் இனங்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
நீலகிரி : குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது அதிகளவில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' என்ற அணில் இனங்கள் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவின் நுழைவு வாயில் அருகே மரக்கிளைகளில் அண்மைக்காலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் 'மலபார் ஜெயன்ட்ஸ் குரில்' என்ற அணில் வகைகள், அதிகளவு காணப்படுகிறது. இது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவை அதிகரித்து காணப்படுகிறது.
இதே போன்று, கோத்தகிரியில் உள்ள லாங்வுட் சோலையில் இந்த அணில்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த அணில்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ உலா வரும் இயல்புடையது. இவை சீதாபழங்களை அதிக அளவு விரும்பி உண்ணுவதால், சீதாப்பழ மரங்களில் அதிகம் காணப்படும் இடங்களில் காணப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு காணப்படும் இதுபோன்ற அரிய வகை மலபார் அணில்களை வனத்துறையினர் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.