கோவை : கேரள மாநிலத்தைப் போல் தமிழகத்திலும் உயர் மின் அழுத்த மின்சாரத்தை கேபிள்கள் மூலம் மண்ணில் புதைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் ரத்த வங்கிகள் உள்ள ரத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி, நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- 2018 -க்கு விடை கொடுப்போம், 2019 -ஐ வரவேற்போம் என்ற தலைப்பில், கோவையில் வருகிற 29 மற்றும் 30 தேதிகளில் பாமகவின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறும். இக்கூட்டத்தின் முடிவில் இந்தாண்டிற்கான செயல்திட்டத்தைப் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிடுவார்.
தமிழகம் முழுவதும் மக்கள் தொகை பெருகி வருகிறது. இந்நிலையில் விளைநிலங்களின் பரப்பு சுருங்கி வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழகத்தில் நீர் உரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நீர் உரிமையைப் பாதுகாக்க, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் உள்ள பேதங்களை களைந்து ஒன்றிணைய வேண்டும். காவிரி உட்பட அனைத்து நதிகளிலும் தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டும்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பஞ்சாலை, பின்னலாடை உட்பட 90 சதவீத தொழில்கள் நலிந்துள்ளது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆற்று நீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் பாசன பரப்பும், குடிநீர் தேவையும் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், இந்தியாவின் முன்மாதிரி திட்டமான சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்படும் 8 ஆயிரம் மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து பேச அரசு முன்வர வேண்டும். கேரளாவை போல் தமிழகத்திலும் உயர் மின் அழுத்த கேபிள்களை மண்ணில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில், கஜா புயலில் மின் கம்பங்கள் சாய்ந்ததை படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
எச்.ஐ.வி தொற்று விவகாரத்தை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள ரத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பை சாத்தியமாக்க பிளாஸ்டிக் உற்பத்தியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்," இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், காடுவெட்டி குரு பற்றி எழுப்பிய கேள்விக்கு, " அவருக்கு உரிய மரியாதையைப் பா.ம.க அளித்து வருகிறது. அவரது குடும்பத்தினர் குறித்து வரும் தகவல்களில் உண்மையில்லை. சில நாட்களில் அவை செய்திகளில் இருந்து வெளியேறும்," என பதிலளித்தார்.