விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் விவகாரம் : தீர்வு காணக் கோரி அனைத்துக்கட்சியினர் மனு

திருப்பூர் : விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணக்கோரி அனைத்துக்கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணக்கோரி அனைத்துக்கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்லப்படும் மின் கோபுரங்களுக்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் ஓரங்களில் புதைவழித்தடமாக கேபிள் லைன் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் தொடர்ந்து 11 நாட்களாகக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்களின் போராட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என கடந்த 5 தினங்களாக 18 விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

இதில், உடல்நிலை மோசமடைந்து 3 விவசாயிகள் நேற்றைய தினம் மயக்கமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...