ஆயத்த ஆடைக்கான முதல் சிறப்பு மய்யம் திருப்பூரில் இன்று தொடக்கம்

திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான முதல் சிறப்பு மய்யம் மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலர் கே.பி.கிருஷ்ணனால் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் : ஆயத்த ஆடைகளுக்கான முதல் சிறப்பு மய்யம் மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலர் கே.பி.கிருஷ்ணனால் இன்று தொடங்கப்பட்டுள்ளது. 

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்துடன் தேசிய திறன் மேம்பாட்டு குழு (NSDC) இணைந்து ஆயத்த ஆடை வீட்டு உபயோகப் பொருட்களுக்கான திறன் துறை குழு (Apparel Made-ups & Home Furnishing Sector Skill Council- AMHSSC) என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதன்மூலமாக, ஆயத்த ஆடைத் துறையின் திறன் மேம்பாட்டுக்கான களஞ்சியத்தை உருவாக்குதல், தேசிய பணி முறைக்கான தரத்தை உருவாக்குதல், துறை சார்ந்த தொழிலாளர் சந்தை தகவல் அமைப்பை நிறுவுதல் மற்றும் தொழில் பயிற்சி தரத்திற்கான கட்டமைப்பை மேம்படுத்துதலுடன், மூன்றாம் தரப்பு மதிப்பீடு சான்றிதழ் வழங்குதல் முதலானவை மேற்கொள்ளப்படுகிறது.

ஏ.எம்.எச்.எஸ்.எஸ்.சி. (AMHSSC)-க்கு அரசு வழங்கிய ஆணையின் அடிப்படையில் தேசிய பணி முறைத் தரம் உருவாக்கம், பயிற்சி வழங்கல் நிறுவனங்களை இணைத்தல், தரமதிப்பீடு செய்தல் மற்றும் சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திறம்பட செய்து வருகிறது.

எதிர்வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏ.எம்.எச்.எஸ்.எஸ்.சி. மூலமாக குறைந்தபட்சம் 2 மில்லியன் மக்களுக்கு இந்த துறையில் பயிற்றுவிக்க மாபெரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் வண்ணம் பிரதம மந்திரி திறன் அபிவிருத்தி திட்டம் (PMKVY) முதலிய பல்வேறு மத்திய, மாநில திறன்வளர்ப்பு திட்டங்கள் மூலம் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

ஏ.எம்.எச்.எஸ்.எஸ்.சி. மூலமாக ஆயத்த ஆடை பயிற்சிக்கான சிறப்பு மையங்கள் திருப்பூர் மற்றும் டெல்லியில் ஒவ்வொன்றும் சுமார் ரூ. 2 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையங்களில் ஆயத்த ஆடை உருவாக்க தொழில்நுட்பம், செயல்முறையில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல் மற்றும் மேலாண்மைக்கும், மேற்பார்வை அபிவிருத்திக்கும் குறுகிய கால பயிற்சி உற்பத்தி பெருக்க நோக்கில் நடைபெறும். இவ்வாறான பயிற்சிக்கான காலஅளவு இரண்டு முதல் மூன்று நாட்களே ஆகும்.

இதன்மூலம், ஆயத்தஆடை தொழில்துறையினருக்கு முதற்கண் உற்பத்தி செலவை குறைத்தல், திறன் மேம்படுத்துதல், இடர்தவிர்த்தல், திறன்மேலாண்மை, வாழ்க்கை முன்னேற்றம் முதலியன ஏற்படும். கட்டணமுறையில் இயங்கும், தொழிற்சாலைகள் பயிற்சிக்கான கட்டணம் வழங்கும். மேலும், எந்த ஒரு வெளிநபர் பயிற்சிமுகமையோ, திறன்பயிற்சி பங்குதாரர்களோ இணையத்துக் கொள்ளப்பட மாட்டாது. இந்த மய்யம் (Center of Excellence) நேரிடையாக பயிற்சி வகுப்புகளை நடத்தும்.

ஆயத்த ஆடைக்கான முதல் சிறப்பு மய்யம் திருப்பூரில் மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் செயலர் கே.பி.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...