திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உடல்நிலை பாதிப்பு

திருப்பூர் : திருப்பூரில் விளை நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து 4 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில், 3 பேரின் உடல்நிலை மோசமானதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர் .


திருப்பூர் : திருப்பூரில் விளை நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து 4 -வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில், 3 பேரின் உடல்நிலை மோசமானதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர் . 

விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்லப்படும் மின் கோபுரங்களுக்கு மாற்றாக நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் ஓரங்களில் புதைவடமாக கேபிள் லைன் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் தொடர்ந்து 10 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையில், தங்களின் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளவில்லை என கடந்த 4 தினங்களாக 18 விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் உடல்நிலை மோசமடைந்து மயக்கமடைந்த சிவக்குமார் என்ற விவசாயி இன்று காலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 



மேலும், பழனிச்சாமி மற்றும் புஷ்பநாதன் ஆகியோர் உடல்நிலையும் மோசமடைந்ததால் அவர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் . இன்று காலை அடுத்தடுத்து 3 விவசாயிகள் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும், அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்கும்வரை விவசாயிகள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப் போவதில்லை என உறுதி தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...