கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவிற்கு விமான சேவையை எளிதாக்கும் விதமாக புதிய சேவைகளை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

கோவையில் இருந்து அமெரிக்காவிற்கு வாரம் 36 விமான சேவைகளை ஏர் இந்தியா வழங்கி வருகிறது. இதன்மூலம், கோவையில் இருந்து டெல்லி சென்று, அங்கு இணைப்பு விமானத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள நகரங்களுக்குச் சென்று சேரலாம்.
மேலும், கோவை பயணிகள் அவர்களது லக்கேஜ்களை, சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் நேரடியாக பெற்றுக் கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவையில் பிற்பகல் 03.05 மணிக்கும், டெல்லியில் இருந்து அமெரிக்க நகரங்களுக்கான இணைப்பு விமானம் 07.50-க்கும் இயக்கப்படுகிறது. டெல்லியில் இருந்து நியூயார்க் மற்றும் சேன் பிரான்சிஸ்கோவிற்கு காலை 7 மணிக்கும், சிகாகோவிற்கு காலை 07.15 மணிக்கும், வாசிங்டன்னுக்கு 07.20 மணிக்கும், நியுவார்க்கிற்கு 06.45 மணிக்கும் இணைப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.