கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள விரிவுரை கூடத்தில் 98 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் மற்றும் 189 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திட்ட இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.
கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உள்ள விரிவுரை கூடத்தில் 98 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் மற்றும் 189 கோடி மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் திட்ட இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, செலவினங்கள் மருத்துவமனை நடவடிக்கைகள் சேவை பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை பொறுப்பாளர்கள், மருத்துவமனையின் பொறுப்பாளர்கள், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர், அமரர் ஊர்தி ரெட்கிராஸ் சொசைட்டியின் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆய்வு கூட்டத்திற்கு பின் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி கூறியதாவது:- கோவை அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் கடந்த ஆண்டைவிட ஒன்றரை கோடி அதிக வருவாயை கொடுத்துள்ளது. இந்த வருவாயை நல்ல விதத்தில் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஜெய்க்கா நிதி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் வர உள்ள கட்டிடத்திற்கான இடம் மற்றும் வரைபடங்கள் எல்லாம் குறித்தும் ஆலோசனைகள் செய்துள்ளோம். அதேபோல அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்துள்ளோம்.
108 சேவை, 104 ஹெல்ப்லைன், அமரர் ஊர்தி போன்ற சேவைகள் மக்களிடத்தில் சரியாக செல்ல வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 108 சேவையை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளில் உள்ள ரெஸ்பான்ஸ் டைமுக்கு இணையாக, நகர்ப்புறங்களில் 8 நிமிடத்திற்கான ரெஸ்பான்ஸ் டைம் அடைந்துள்ளோம். கோவை ஆர்.டி.ஏ. ரெஸ்பான்ஸ் டைம் ஆனது 12 நிமிடம் ஆக உள்ளது. இந்த நேரத்தை குறைக்க ஊர்திகளை அதிகப்படுத்த உள்ளோம். அமரர் ஊர்தி சேவையானது 98% நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, பொதுமக்களின் சேவைக்காக வாகன எண்ணிக்கையும் அதிகரித்துள்ளோம்.
தனியார் வாகனத்திற்கு கட்டணம் கொடுத்து பொதுமக்கள் செல்வதை கட்டுப்படுத்த அரசின் சார்பில் அதிவேகமாக அமரர் ஊர்திகளை அதிகப்படுத்தி வருகிறோம். அரசு மருத்துவமனையில் காப்பீடு திட்டத்திற்காக ஒரே நபரின் பெயரில் இரண்டு என்ட்ரி போடப்படுவதாக எழுந்த புகார் ஆனது முற்றிலும் தவறானது, இவ்வாறு அவர் கூறினார்.