கோவை : பொள்ளாச்சி சாலை - போத்தனூர் குறிச்சிப் பிரிவு அருகே உள்ள அரவான் கோவில் திருவிழாவையொட்டி வரும் 28-ம் தேதி காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிப்பதாவது :- கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்களான பேருந்து, லாரி மற்றும் ஈச்சர் வாகனங்கள் ஆத்துப்பாலம் வழியாக சென்று போத்தனூர் குறிச்சிப் பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக ரயில் கல்யாண மண்டபம், போத்தனூர் புதுப்பாலம் வழியாக செட்டிப்பாளையம் சாலையில் சென்று செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம்.
கோவை உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம் வழியாக சென்று போத்தனூர் குறிச்சி பிரிவில் இடதுபுறம் திரும்பி போத்தனூர் கடைவீதி வழியாக ரயில் கல்யாண மண்டபம், சாரதாமில் ரோடு, தக்காளி மார்க்கெட் வழியாக பொள்ளாச்சி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தற்போது வரும் மலுமிச்சம்பட்டி சாலை வழியாக மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து, பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபக்கம் திரும்பி, சுகுணாபுரம் வழியாக பாலக்காடு சாலை சென்று, அங்கிருந்து புட்டுவிக்கி ரோடு வழியாக சென்று சேதுமாவாய்கால் செக்போஸ்ட் வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பொள்ளாச்சியில் இருந்து கோவை உக்கடம் நோக்கி வரக்கூடிய இலகுரக வாகனங்கள் அனைத்தும் மதுக்கரை மார்க்கெட் ரோடு வந்து, பிள்ளையார்புரம் சந்திப்பில் இடதுபக்கம் திரும்பி, சுகுணாபுரம் வழியாக செல்லலாம். அல்லது மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக வந்து, மாச்சம்பாளையம் ரோட்டில் இடதுபக்கம் திரும்பி, மாச்சம்பாளையம் ரோடு வழியாக சென்று ஞானபுரம் சந்திப்பில் பாலக்காடு சாலையை அடைந்து, செல்லவேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார்.