விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கடந்த 3-ம் தேதியன்று எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் செலுத்தப்பட்டிருக்கிறது. அப்போது தனக்கு செலுத்தப்பட்டது எச்.ஐ.வி. பாதிப்பு ரத்தம்தான் என அந்தப் பெண்ணுக்கு தெரியாது. பின்னர், வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தனியார் மருத்துவனையில் சோதித்து பார்த்தபோது, கர்ப்பிணியின் ரத்தம் எச்.ஐ.வி. பாசிட்டிவ் என தெரியவந்தது.
இதையடுத்து, இந்த சம்பவம் பெரும் பூதாகரமாகியது. பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட இளைஞர் 2 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருக்கிறார். அப்போதே அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருந்துள்ளது. ஆனால் அதுபற்றி அவரிடம் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பணியின்போது கவனக்குறைவாக இருந்த சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. கருவில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வராமல் தடுக்க சிகிச்சை அளிக்கப்படும், எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்ட எச்.ஐ.வி. தொற்று ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தீவிர மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.