மேட்டுப்பாளையத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக கிராமிய கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

கோவை : மேட்டுப்பாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கிராமிய ஆடல், பாடல் கலைநிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கிராமிய ஆடல், பாடல் கலைநிகழ்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மது மற்றும் கள்ளசாராயம் போன்ற போதை வஸ்த்துக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட நகர மற்றும் கிராமப்புறங்களில், தமிழக அரசின் மதுவிலக்கு காவல்துறை மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டன. 



மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம், சந்தைக்கடை, நடூர், ஓடந்துறை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் கிராமிய பாடல்கள் மற்றும் நடனங்கள் ஆடி கலைக்குழுவினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். “போதை ஏறினால் பாதை மாறும், பாதை மாறினால் வாழ்வு நாசமாகும்” என கிராமப்புற பாடல்களை பாடியும், அதற்கேற்ற நடனங்களை ஆடியும் காண்போரை கவரும் வகையில் கலை நிகழ்சிகள் அமைந்தன.

இது தவிர பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், கரக்காட்டம், கட்டைக்கால் ஆட்டம் என அனைவரையும் ஈர்க்கும் விதமாக சாலையோரங்களில் கிராமப்புற நடனங்கள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வாகன விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் போதை பழக்கத்தால் அதிகரித்து வருவது குறித்து விவரிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...