'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு" குறித்த நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

கோவை : காந்திபுரம் பேருந்துநிலையத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை : காந்திபுரம் பேருந்துநிலையத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 23, 2018 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘பிளாஸ்டிக் மாசிலா தமிழ்நாடு” உருவாக்கிட மாநில அளவிலான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் விதமாக, அதற்கான லோகோவினை அறிமுகம் செய்து www.plasticpollutionfreetn.org என்ற வலையதளத்தில் Plastic Pollution Free Tamil Nadu என்ற கைப்பேசி செயலியையும் துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்ப்பது மற்றும் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது குறித்த குறும்படங்களை வெளியிட்டு, பிளாஸ்டிக் மாசு குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட விளம்பர தூதரையும் அறிமுகம் செய்து வைத்தார்கள்.



அதன் தொடர்ச்சியாக, “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடமாடும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கடந்த 10-ம் தேதி முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்வாகனம் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழக அரசின் ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் இன்று பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்திடும் வகையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாகனம் மூலம் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிர்ப்பது குறித்தும், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிட பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பயணம் மேற்கொள்ள உள்ளது. 

கோவை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எவர்சில்வர் பாத்திரங்கள், வாழையிலைகள், பாக்குமட்டை தட்டுகள், துணிப்பைகள், சணல் பைகளை பயன்படுத்த வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...