நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஸ்ரீ ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஸ்ரீ ஹெத்தையம்மன் கோவில் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.
ஒருவார காலம் நடைபெறும் இத்திருவிழாவின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், கோத்தகிரி கேர்பெட்டா ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, படுகர் இன மக்கள் ஒருவார காலம் விரதமிருந்து தூய்மைக்கு இலக்கணமான பாரம்பரிய வெண்ணிற ஆடையணிந்து ஸ்ரீ ஹெத்தையம்மன் கோயிலுக்கு நடைப்பயணமாக சென்று ஒற்றை நாணயத்தை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.

அதேபோல, மாவட்டத்தில் பெத்தளா, நுந்தளா, ஒன்னதலை, ஜெகதளா உள்ளிட்ட பல்வேறு கிராம கோயில்களில் இருந்து ஸ்ரீ ஹெத்தையம்மன் பயன்படுத்தியதாக கருதப்படும் புனித பிரம்பை ஏந்தி நடைப்பயணமாக பல கிலோ மீட்டர் தூரம் சென்று அம்மனை வழிபட்டால் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
இத்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான பேரகணி கோயிலில் திருவிழா நடைபெற்றதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை என்பதால் பல்வேறு கிராமங்களில் இருந்து படுகர் இனமக்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.