கோவை : திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு குடியிருப்பு பகுதிகளை தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை ஒதுக்குப்புறமான இடங்களில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியும் தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், பள்ளி மைதானங்களில் குப்பைகளை கொட்டி, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடங்க உள்ளன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதி மக்களும் தனித்தனியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை மாநகராட்சியிடம் மனுக்களையும் அளித்துள்ளனர்.

இந்த சூழலில், குடியிருப்பு பகுதிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல், மாற்று இடங்களில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் கோவை மாநகராட்சி ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஏற்கனவே, குப்பைகளை வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் வாங்கும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சரிவர நடைபெறுவதில்லை. இந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஒதுக்குப்புறமான இடங்களைத் தேர்வு செய்து அங்கு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்," என்றார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த மாற்று இடங்களை தி.மு.க. பரிந்துரை செய்யுமா..? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "ரிசர்வ் சைட் பற்றிய அனைத்துக் குறிப்புகளும் மாநகராட்சியின் வசம் உள்ளது. மாற்று இடங்களை தேர்வு செய்வது மாநகராட்சி அதிகாரிகளின் பணி. நான் ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுத்தால், அதற்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தான் தெரிவிப்பார்கள்," என்றார்.