திருப்பூர் : செயற்கை மழையை பொழிய வைக்கும் ஆளில்லா குட்டி விமானம் தயாரித்து உடுமலையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.கே.ஆர். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் திருவருட்செல்வன். இவரது தந்தை கருணாநிதி மற்றும் தாய் மங்கையர்கரசி விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்துப் போனதால், விவசாயிகள் விவசாய நிலங்களை வீட்டுமனைகளுக்கு விற்பனை செய்து வருவதைக் கண்ட மாணவன் திருவருட்செல்வன், விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.
அதன்படி, ஆளில்லா குட்டி விமானம் மூலமாக இரசாயன கலவை (உப்பு மற்றும் தண்ணீர்) வானில் மேகம் கூடும் இடத்தில் தூவும் போது செயற்கை மழை பொழிய வைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். ஆனால், குட்டி விமானம் சந்தையில் குறைந்தபட்ச விலை ரூ. 1,50,000 முதல் இருந்ததால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், முதலில் சொந்தமாக ஆளில்லா குட்டி விமானம் தயாரிக்க முடிவு செய்து, அதை குறைந்த செலவில் தயாரிக்க திட்டமிட்டார். அதன்படி, வெறும் ரூ. 25,000 செலவில் குட்டி விமானத்தை தயாரித்து வானில் பறக்க விட்டு வெற்றி பெற்றார். சந்தையில் விற்கும் ஆளில்லா குட்டி விமானங்கள் கீழே விழுந்தால் உடைந்து போகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், மாணவன் திருவருட்செல்வன் தயாரித்த குட்டி விமானம் கீழே விழுந்தாலும் எந்தபாதிப்பும் இல்லாத வகையில் தயாரித்துள்ளார்.

பின்னர், இரசாயன கலவையை (உப்பு மற்றும் தண்ணீர்) கொண்டு வானில் மேகங்கள் ஒன்றுகூடும் இடத்தில், இந்த கலவையை தூவி செயற்கை மழையை பொழியச் செய்தார். மேலும், தனது கண்டுபிடிப்பை திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் செயல்படுத்தி முதல் பரிசை வென்றார்.

மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவன் மற்றும் அவரது பெற்றோரைப் பள்ளியின் செயலாளர் கார்த்திக்குமார் சால்வை அணிவித்து பாராட்டினார். மேலும், மாணவன் உயர்கல்வி படிக்கும் வரையிலான மொத்த செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
விவசாயிகளின் துயரைப் போக்கும் வகையில், செயற்கை முறையில் மழை பொழிய வைக்கும் ஆளில்லா குட்டி விமானத்தை செயல்படுத்த தேவையான அனுமதியை மத்திய, மாநில அரசுகள் வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றார் மாணவன் திருவருட்செல்வன்
செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அந்த முயற்சியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் குறைந்த செலவில் செயற்கை மழை பொழிய வைக்கும் மாணவனின் திறமையை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.