கோவை : வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிரதான கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைக் கண்டித்து கடந்த புதன்கிழமை அன்று வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பகுதி வாரியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 26-ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிரதான கிளை அலுவலகத்தில் வங்கிகள் இணைப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்று வங்கி இணைப்பிற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "வங்கிகள் இணைப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்பட்சத்தில், கிளைகள் மூடல், ஆட்குறைப்பு என பல காரணங்களால் வாடிக்கையாளர் சேவை பாதிப்பு ஏற்படும். எனவே, மத்திய அரசு இந்த வங்கிகள் இணைப்பைக் கைவிட வேண்டும்," இவ்வாறு அவர் வலியுறுத்தினர்.