விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : விவசாயிகளுக்கு ஆதரவாக பொங்கலூரில் இன்று கடையடைப்பு போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பொங்கலூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.



திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பொங்கலூரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரம் அமைத்துக் கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், திருப்பூர், கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. விவசாய நிலங்களில் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லாமல், நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாகக் கொண்டு செல்லக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாய நிலங்களின் மீது கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8 மாவட்டங்களில் விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளிபாளையத்தில் நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10-வது நாளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, 4-வது நாளாக 18 விவசாயிகள் தொடர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 



மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று பொங்கலூர் ஒன்றியத்தில் முழு கடையடைப்பு போரட்டம் நடத்திடவும் அனைத்துகட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பொங்கலூர் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. கடைகள் திறக்கப்படாததால் மக்கள் கூட்டம் இன்றி சாலைகள் வெறிசோடி காணப்படுகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...