சத்துணவு மையங்களை மூடும் திட்டமில்லை : சமூக நலத்துறை விளக்கம்

கோவை : தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடும் திட்டமில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கோவை : தமிழக பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களை மூடும் திட்டமில்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் ஏழை மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில், மதிய உணவளிக்கும் சத்துணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 43 ஆயிரத்து 200 சத்துணவு மையங்கள் மூலம் 50 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் பல சத்துணவு மையங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.

இதனால், சென்னையை தவிர 31 மாவட்டங்களில் 25-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும், 8,000 சத்துணவு மையங்களை மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கோவையில் மட்டும் 25-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 150 பள்ளிகளில் இருக்கும் சத்துணவு மையங்களை மூட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இதனிடையே, சமூக நலத்துறையின் இந்த முடிவால் மாணவர்களும், சத்துணவு ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி வரும் 27-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்தது.

இந்த நிலையில், சத்துணவு மையங்களை மூடும் திட்டம் இல்லை என சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே பள்ளி வளாகத்தில் ஒன்று முதல் 5-ம் வகுப்புக்கு தனியாகவும், 6 முதல் 10-ம் வகுப்புக்கு தனியாகவும் என 2 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வந்தால், அவை மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரே மையமாக இணைப்பதாக சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், சத்துணவு மையங்களில் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை நிரப்புவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...