தமிழகத்தில் கரிசல் மண்ணை அகற்றி காவி மண் மூலம் தாமரையை மலர வைப்போம் : திருப்பூரில் தமிழிசை சூளுரை

திருப்பூர் : தமிழகத்தில் கரிசல் மண்ணை அகற்றி காவி மண் மூலம் தாமரையை மலர வைப்போம் என திருப்பூரில் நடந்த வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சூளுரைத்துள்ளார்.

திருப்பூர் : தமிழகத்தில் கரிசல் மண்ணை அகற்றி காவி மண் மூலம் தாமரையை மலர வைப்போம் என திருப்பூரில் நடந்த வாஜ்பாய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சூளுரைத்துள்ளார்.

திருப்பூரில் உள்ள ராக்கியாபாளையம் பகுதியில் வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி கொடியேற்றி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 



அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திருப்பூர் அருகில் ஒரு லட்சம் குடும்பங்கள் கலந்து கொள்ளும் மகாலட்சுமி யாகத்தில் கலந்து கொண்டு வந்து இருக்கிறேன். இது ஆன்மீக மண். இது காவி மண். இதை ஒழித்து விட்டு கருஞ்சட்டை போடுவேன் என்று சொல்வதெல்லாம் இங்கு நடக்காது. அதையெல்லாம், ஒழித்து விட்டு தாமரையை மலர வைக்கும் என்பதால் அவர்கள் பதற்றத்தோடு இருக்கிறார்கள். நீங்கள் எந்த சட்டை மாநாடு நடத்தினாலும் சட்டை செய்யப்போவதில்லை. நாங்கள் மதம் சார்ந்த கருத்துக்களை பிரிவினைவாதமாக எடுத்து கொள்வதில்லை. 



மேலும், ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி இருக்கிறார். ஆனால், ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுப்பெறாது. ராகுலை முன்னிலைப்படுத்தியதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...