திருப்பூர் : விவசாய நிலங்கள் மின்கோபுரம் அமைப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்தி விவசாயிகள் நலனை காக்க வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மகாசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் 40-வது தலைமை மகாசபை திருப்பூர் மாவட்ட சி.பி.ஐ. அலுவலகத்தில் நடைபெற்றது . இதில், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், பனியன் பேக்டரி லேபர் யூனியனி மாநில தலைவர் சுப்பராயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை பால்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருவது கண்டனத்துக்குரியது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோல, ஜனவரி 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்ததை திருப்பூரில் வெற்றியடையச்செய்ய வேண்டும், இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.