200 அடி ஆழ கிணற்றில் விழுந்த டிப்பர் லாரி : இருவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்

கோவை : தடாகம் அருகே 200 அடி கிணற்றில் குடிபோதையில் ஓட்டப்பட்ட டிப்பர் லாரி விழுந்த விபத்தில், இருவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை : தடாகம் அருகே 200 அடி கிணற்றில் குடிபோதையில் ஓட்டப்பட்ட டிப்பர் லாரி விழுந்த விபத்தில், இருவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி பகுதியில் ராஜப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் தோட்டப்பகுதியில் உள்ளது. இவருடை தோட்டப்பகுதியில் சுமார் 200 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று இரவு டிப்பர் லாரி ஒன்று நிலைதடுமாறி விழுந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த லாரியில் இருந்து மணி என்பவரை உயிருடன் மீட்டனர். 



பின்னர், அவரிடம் விசாரித்ததில் தனது நண்பர்களான பாலமுருகன், செல்வன் ஆகியோருடன் லாரியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி விவசாய கிணற்றில் விழுந்ததாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, படுகாயம் அடைந்த அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாரியின் அடியில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், லாரியை மேலே கொண்டு வந்தால் மட்டுமே அவர்களை மீட்க முடியும் என்பதால், ராட்சத கிரேன் கொண்டு வந்து லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



இதனிடையே, தண்ணீர் இல்லாத சேறு நிறைந்த கிணற்றில் விழுந்த லாரியின் அடியில் சிக்கியுள்ள இருவரும் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், குடிபோதையில் அதிவேகமாக லாரியை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...