பிரபலமடையாத உதகை மரவியல் பூங்காவில் முதல் முறையாக நுழைவு கட்டணம் : உள்ளூர் மக்கள் அதிருப்தி

நீலகிரி : உதகையில் பிரபலமடையாத மரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு முதல்முறையாக நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால், உள்ளூ மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நீலகிரி : உதகையில் பிரபலமடையாத மரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு முதல்முறையாக நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால், உள்ளூ மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் கடந்த 982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே மரவியல் பூங்கா தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய சுமார் 60 வகை மரங்கள் பூங்காவில் நடப்பட்டு, அவை வளர்க்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. இதற்கிடையே, பூங்காவை சுற்றி தடுப்புவேலிகள் அமைக்கப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பொலிவிழந்து காணப்பட்டது.



கடந்த 2006-2007-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் செலவில் பூங்கா புனரமைக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. மேலும், கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பூங்காவின் மொத்த பரப்பளவு 1.58 ஹெக்டேர் ஆகும். பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் பல்வேறு வகையான மலர்செடிகள், மரங்கள், அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. உயர்ந்த மரங்களுக்கு நடுவே பசுமையான புல்வெளிகளும் காணப்படுகிறது.

ஆனால், போதுமான விளம்பரம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தே காணப்படும் நிலையில், தோட்டக்கலைத் துறை சார்பில் திடீரென மரவியல் பூங்காவுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம், கேமரா ரூ.10-ம், வீடியோ கேமராவிற்கு ரூ.50-ம் என கட்டணம் நிர்ணயித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதற்காக டிக்கெட் கவுண்டரும் அமைக்கப்பட்டுள்ளது.



தற்போது தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மரவியல் பூங்காவிற்கு நுழைவுக் கட்டணம் அறிவித்திருப்பதால், பிரபலமடையாத இந்தப் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் வரத்து மேலும் பாதிக்கும் சூழல் இருப்பதாக உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே, நுழைவு கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...