சுண்டாக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் ரூ.11.83 கோடி செலவிலான புதிய தார்சாலை திறப்பு

கோவை : பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய புதிய தார்சாலையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை : பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய புதிய தார்சாலையை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலம் வார்டு எண் 87-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி சாலைகளை இணைக்கும் வகையில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய 2.20 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையை இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தொழில்வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மக்கள் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. எனவே, மாநகரப் பகுதிகளில் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ற வகையில் சிறப்பான திட்டமிடுதலுடன் சாலைப்போக்குவரத்தினை மேம்படுத்திட வேண்டும் என்ற வகையில், அதிகளவிலான நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. 

பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, சாலை கட்டமைப்பு மேம்பாடு வழி வகுக்கிறது. பொதுமக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த சாலைக் கட்டமைப்பு வசதிகள் பெரிதும் துணை புரிகின்றன. அதன் அடிப்படையில், இன்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 87-க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை மற்றும் சுண்டாக்கமுத்தூர் புட்டுவிக்கி சாலைகளை இணைக்க வாய்க்கால் தடுப்புச்சுவருடன் கூடிய 2.20 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ. 11.83 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இச்சாலைகளை ஒளிரூட்டும் விதமாக ரூ. 80லட்சம் மதிப்பீட்டில், புதிதாக மின்கம்பங்களுடன் கூடிய எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும், இவ்வாறு கூறினார். 

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி, மாநகர பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரா.ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...