கோவை : கோவையில் காட்டு யானை விநாயகன் தாக்கியதில் உயிரிழந்த வன ஊழியர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவையை அடுத்த தடாகம், சின்னதடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில், கடந்த அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை விநாயகன் புகுந்தது. அப்போது, அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், துரிதமாக செயல்படும் வனக் குழுவினர் (ஆர்.ஆர்.டி.) அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
யானை புகுந்த சத்தம் கேட்டு துரிதமாக செயல்படும் வனக்குழு ஊழியரான தடாகத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28) மற்றும் ராமதாஸ், சூரிய பிரகாஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். அப்போது, திடீரென ஆவேசமடைந்த யானை விநாயகன் திரும்பி வந்து வெங்கடேசனை மிதித்து, தூக்கி வீசியது. இதில், அவரது தலை, கால், இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த ஆர்.ஆர்.டி. வீரர் வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, தலைமை வன பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு வார்டனுமான ரவி காந்த் உபாதத்யாய், வனஅதிகாரி வெங்கடேசனின் உயிரிழப்பிற்கு நிவாரணமாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.
எனவே, கூடுதலாக ரூ. 6 லட்சம் வெங்கடேசனின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே காட்டு யானை விநாயகன் பிடிக்கப்பட்டு, முதுமலையில் கொண்டு சென்று விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.