பறவைகளின் சொர்க்கபுரியாக திகழும் கலங்கல் கிராமம்

கோவை : திறந்தநிலை புல்வெளிகள், தரிசுநிலங்களைக் கொண்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கலங்கல் கிராமம் பறவைகளின் மினி சரணாலயமாக திகழ்கிறது.

கோவை : திறந்தநிலை புல்வெளிகள், தரிசுநிலங்களைக் கொண்ட கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கலங்கல் கிராமம் பறவைகளின் மினி சரணாலயமாக திகழ்கிறது. 

கோவை மாவட்ட புறநகர் கிராமமான கலங்கல் கிராமம், பெரும்பாலும் திறந்தநிலை புல்வெளிகளும், தரிசுநிலங்களையும் கொண்டுள்ளது. எனவே, இந்தப் பகுதிக்கு ஆண்டுதோறும் வித்தியாசமான, ஆபூர்வ பறவைகள் வந்து செல்கின்றன. இதனைக் காண கடந்த 2016-ம் ஆண்டு முதல் பறவைகளைக் காணும் ஆர்வலர்கள் கலங்கலை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். 



இந்த நிலையில், பறவைகளின் புலம்பெயரும் சீசன் தொடங்கி விட்ட நிலையில், கோவை இயற்கை சொசைட்டியின் உறுப்பினர்களான காஜா மோகன்ராஜ், கிஷோர் குமரன், பி.பி. பாலாஜி, ஸ்ரீநிவாஸ் ராவ் மற்றும் ஜி. பிரகாஷ் ஆகியோர் பறவைகளின் கணக்கெடுத்தனர். கிரேட்-கிரே ஷ்ரைக், இஷாபெலின் ஷ்ரைக், ஷிபெரியன் ஸ்டோன்சாட், அமுர் ஃபெல்கான், யூரோசியன் ரைநெக் மற்றும் கிரே நெக் பண்டிங் உள்ளிட்ட ஏராளமான பறவைகளை அவர்கள் கண்டுகளித்தனர். 



"ஒருசில பறவைகள் இடம்விட்டு இடமாறும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் அதனைக் காண முடியாது. ஆனால், அமுர் ஃபெல்கான் மற்றும் இஷாபெலின் வீடியர் ஆகிய பறவைகள் இரண்டாவது குளிர்காலத்தில் மீண்டும் இங்கு வரும்," என்கிறார் காஜா மோகன்ராஜ்.



இதைத் தொடர்ந்து, பி.பி. பாலாஜி கூறுகையில், "கடந்த ஆண்டு குளிர் காலத்தில் வந்த பறவைகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த ஆண்டு கிரே நெக் பண்டிங், யூரோசியன் ரைநெக் பறவைகளின் எண்ணிக்கையைக் குழுவினரால் அதிகளவில் காண முடிந்தது," என்றார். 



இதனிடையே, கோவை இயற்கை சொசைட்டியின் உறுப்பினர்கள் விஜயகுமார் மற்றும் சதீஷ் ஆகியோர், பாறையின் மீது கிரே நெக் பண்டிங் பறவை அமர்ந்திருந்திருப்பது போன்ற அரிய காட்சியை புகைப்படம் பிடித்தனர். "கலங்கல் பகுதிக்கு ஒருமுறை வந்த போது, வழி தவறிய எங்களது கார் வேறு பகுதிக்கு சென்றது. ஆனால், அங்கு பாறையின் மீது கிரே நெக் பண்டிங் பறவை அமர்ந்திருந்த அரிய காட்சியை கண்டோம். முதல்முறையாக இந்த பறவைகளைக் காண வந்தவர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது," என்கிறார் கோவை இயற்கை சொசைட்டியின் உறுப்பினர் ஜி. பிரகாஷ்.



 

மேலும், அங்குள்ள புல்வெளிகளில் வெள்ளை நிற கண்களுடைய புசார்டு, பிளாக்-விங் கெய்ட், எல்லோ வாட்டில்டு லாப்விங், இந்தியன் கழுகு ஆந்தை, இந்தியன் கர்சர் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் காணப்பட்டன. 



இதனிடையே, பறவைகளின் இயற்கை வாழ்விடங்களை அழித்து, அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மதுபானக் கடைகளும், குவாரிகளும், மனிதர்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால், பறவைகள் கண்காணிப்பாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். 

உள்ளீடு : ஆஷிகா அருள் 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...